Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 13, 2022

மே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

வணக்கம்.
முக்கிய அறிவிப்பு

இன்றுடன் 13.05.22 மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு நிறைவு பெறுவதை ஒட்டி மாணவர்களுக்கு நாளை முதல் (14.05.22) கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.





ஆனால் ஆசிரியர்கள் 20. 5 \2022 வரை பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்துதல்: மக்கள் தொகை கணக்கெடுப்பு முடித்தல்:

EER பதிவேடு முடித்தல்:

EMIS - School profile/Teacher profile Update செய்தல்

2022- 23 கல்விஆண்டிற்கான பதிவேடுகளை தயார் செய்தல்

மாணவர் சேர்க்கைக்குமுன்னேற்பாடுகள் மேற்கொள்ளுதல்போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இயக்குனரிடம் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.

எனவே 20 5 2022 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து வருகைப்பதிவேட்டில் ஒப்பம் இடவேண்டும்.



Kind attention CEOs ,

Today , the 13th instant May 2022 being the last working day , the annual vacation for students commence from tomorrow and in view of valuation of exam papers, preparation of consolidated mark cum promotion registers all teachers will have to attend school until 20 May 2022.

As far, teachers of Elementary is concerned, it’s mandated that School attendance particulars should be tallied with EMIS entries and a certificate to that effect should be handed over to BEOs. In case of any EMIS data mismatch that should be rectified . With respect to High/Hr sec Sch teachers, the same instructions apply and teachers engaged on exam duty, may do it afterwords. *For schools/ teachers completing the above said work earlier than 20 May 2022, need not attend school until the last date notified* .However, teachers who got NOC to travel abroad may be asked to expedite their work and be exempted from attending school till 20 May 2022, wherever it applies.

Further , tomorrow (14/05/2022) is declared as holiday.

Pl bring it to the notice of all concerned.

A detailed circular follows.

By Directors order.

By order.

அனைவருக்கும் வணக்கம்.
அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளுக்கு இன்று கடைசி வேலை நாளாகும்

மாணவர்களுக்கான கோடை விடுமுறை நாளை முதல் அறிவிக்கலாகிறது.

விடைத்தாள் திருத்தும் பணி, தேர்ச்சி அறிக்கை தயாரித்தல், சரிபார்த்தல் மற்றும் வெளியிடும் பணிக்காக அனைத்து ஆசிரியர்களும் மே 20 வரை பள்ளிக்கு வருகை தருதல் வேண்டும்.

மேலும் பள்ளியில் பராமரிக்கப்படும் வருகை பதிவேடு விவரங்களை EMIS தளத்தில் உள்ள விவரங்களுடன் சரிபார்ப்பு செய்து, இது சார்ந்து சான்றினை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தல் வேண்டும் .

அனைத்து ஆசிரியர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொதுத் தேர்வுப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும்,

தேர்வு பணி சார்ந்து அழைப்பு விடுக்கப்படும் போது உடன் வருகை தரும் வகையிலும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்க லாகிறது.

முதன்மை கல்வி அலுவலர் காஞ்சிபுரம்.

(குறிப்பு: மேற்காண் தகவல் குறித்து உரிய விளக்கங்கள் பெறப்பட்டவுடன் அனுப்பி வைக்கப்படும். நாளை 14.05.2022 அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறையாகும்.)

EMIS லும் வருகையினை பதிவிட வேண்டுமென அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி

No comments:

Post a Comment