Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 20, 2022

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கிறவங்க ,இதை படிச்சதும் அந்த பழக்கத்தை மாத்திக்குவிங்க

நாம் பின்பற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்கள் சில, நம்முடைய சுகாதார மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாகவும், தீர்வாகவும் மாற வாய்ப்புள்ளது. அதில் ஒன்றுதான், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துவது, சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது. இந்த விஷயங்களில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நாள்தோறும் இருந்த வண்ணம் உள்ளது .

சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.



உணவை ஜீரணிக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள், இதற்கிடையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கிறது. அதனால்தான் உணவு உண்ட 45-60 நிமிடங்களுக்குப் பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. உணவு உண்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதால் எடை கட்டுக்குள் இருக்கும்.

2. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் சரியாகும், செரிமான அமைப்பு வலுவாக இருக்கும்.

3. வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை நீங்கும்.

4. உணவில் இருக்கும் சத்துக்களை உடல் நன்கு உறிஞ்சிக் கொள்ளும்.

5. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதும் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

* உடல் பருமன் பிரச்சனை ஏற்படும்

* செரிமான பிரச்சனைகள் ஏற்படும்

* உயர் இரத்த சர்க்கரை அளவு பிரச்சனை ஏற்படும்

* வயிற்று வாயு பிரச்சனை ஏற்படும்

No comments:

Post a Comment