Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 20, 2022

உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை தினமும் குடிச்சு பாருங்க... இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்!

பொதுவாக உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சை யை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.

ஒரு கையளவு உலர் திராட்சை யில் 108 கலோரிகள், ஒரு கிராம் புரதச்சத்து, 29 கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் ஃபைபர், 21 கிராம் சர்க்கரை ஆகியவைத் தவிர இரும்பு, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி 6, மாங்கனீஸ், போரான் போன்ற சத்துக்களும் நிரம்பி உள்ளன.

அதனை ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் பல நன்மைகளை தருகின்றது. அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உலர் திராட்சை தண்ணீர் தயாரிப்பது எப்படி?தண்ணீர்
உலர்ந்த திராட்சை
எலுமிச்சை (விருப்பத்தை பொறுத்தது)

செய்முறை2 கப் தண்ணீரில் 150 கிராம் அளவுள்ள உலர் திராட்சையை போட்டு, நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பின்னர் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, மீண்டும் குறைந்த தீயில் சூடாக்கவும்.

இப்போது இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் சுவையை மேலும் கூட்டவும், வைட்டமின் சி சத்தைப் பெறவும் விரும்பினால் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம்.

இந்த தண்ணீரை குடித்த பிறகு, அடுத்த 30 நிமிடங்களுக்கு எதையும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்மைகள்இந்த பானம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர் உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குபடுத்தப்படுத்த உதவும்.

இரவு முழுவதும் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைரஸைத் தடுக்க தினந்தோறும் உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது.

உலர் திராட்சை தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய பொருளாக உள்ளது. எனவே இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.

திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

உலர் திராட்சை தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுத்து, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் . திராட்சைப்பழத்தில் நிறைந்துள்ள பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்துள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

திராட்சையில் உள்ள பொட்டாசியம் உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த தண்ணீரை குடிப்பது நல்ல பலன் கொடுக்கும். உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு, ரத்த சோகையையும் தடுக்கிறது.

திராட்சையில் எலும்புகளை உருவாக்க உதவும் போரான் உள்ளது. அதேபோல் எலும்புகளுக்குத் தேவையான கால்சியமும் திராட்சையில் நிறைந்துள்ளது

No comments:

Post a Comment