JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முதலிடத்தில் உள்ளது.
இதில் கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, பொட்டாசியம், ஜிங்க் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. பல மருத்துவ பயன்களையும் கொண்டது.
மாம்பழ பிரியர்கள், அதை பல உணவுகளுடன் கலந்தும் சாப்பிடுவார்கள். ஆனால் மாம்பழத்துடன் சில பொருட்களை கலந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இப்போது மாம்பழத்துடன் எந்த பொருட்களை கலந்து சாப்பிடக்கூடாது? அப்படி சாப்பிட்டால் எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் பார்ப்போம்.குளிர் பானங்கள் மற்றும் மாம்பழங்கள் ஒரு மோசமான உணவுச் சேர்க்கையாகும்.
எக்காரணம் கொண்டும் குளிர் பானங்களை மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு அல்லது பின்பு சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தி கோமாவிற்கு கூட கொண்டு சென்றுவிடும்.
மாம்பழ லஸ்ஸியை விரும்பி குடிப்பவராயின், அதை உடனே நிறுத்துங்கள். ஏனெனில் மாம்பழத்துடன் தயிரை சேர்த்து உட்கொண்டால், அது தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு பாகற்காய் சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது குமட்டல், வாந்தி, சுவாசப் பிரச்சனைகள் போன்றவற்றால் அவதிப்பட வைக்கும்.
காரமான உணவுகளை உண்ணும் போது மாம்பழத்தை சாப்பிட்டால், அது முகப்பரு, பிம்பிள் மற்றும் பிற சரும நோய்களை ஏற்படுத்தும்.
மாம்பழத்தை சாப்பிடும் போதும், சாப்பிட்ட பின்னரும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
No comments:
Post a Comment