Search This Blog

Wednesday, May 4, 2022

தேர்வறையில் முகக்கவசம் கட்டாயம் - தமிழக அரசு

0 comments
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தனி மனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் முகக்கவசம் அணிந்தே மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஒரு தேர்வறையில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுத உள்ளதாக குறிப்பிட்ட சுகாதாரத்துறை, தேர்வுப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும், கண்காணிப்பாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment