Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 8, 2022

9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறுதித்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் ஆல்பாஸ் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்றும் இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டது, பாடத்திட்டம் குறைக்கப்பட்டது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 9-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் நீண்ட நாட்களாக பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment