SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Monday, June 6, 2022

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்..? அமைச்சர் முக்கிய அப்டேட்.!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கும் என்றும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால் அதை பின்பற்றுவோம்'என்றார்.

No comments:

Post a Comment