Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, June 5, 2022

கிட்னி கெட்டு போகாமலிருக்க ஒரு நாளைக்கு எவ்ளோ தண்ணீர் குடிக்கனும் தெரியுமா ?

நமது உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள்கூட உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம்.

நாம் தினமும் சாப்பிடும் உணவில் இருந்தே ஒரு நாளில் நம் உடலுக்குத் தேவையான 25 சதவிகிதத் தண்ணீர் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். இவ்வளவு தண்ணீர்தான் குடிக்க வேண்டும் எனப் பொதுவாகக் கூறமுடியாது. 

காலநிலை, வயது, உடற்கூறு, நோய்களின் பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் தண்ணீர் குடிக்கும் அளவு மாறுபடும். எந்தெந்த வயதினர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம், சர்க்கரை, இதய நோய்கள் உள்ளவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம், 

ஆர்ஓ வாட்டர், ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானகள் நல்லதா, தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று கூறுகிறோம்

ஒரு நாள் ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, ஆனால் அவரவர் உடலுக்கு மட்டுமே தெரியும். எனவே தாகம் எடுக்கும் பொழுது மட்டுமே நீரை அருந்த வேண்டும். தாகம் எடுக்கும் பொழுது உங்களுக்குத் தேவையான அளவு மனதிற்கு பிடித்த அளவு, ஆசை தீர தண்ணீர் குடிக்க வேண்டும். 

மீண்டும் தண்ணீரை மறந்து விட்டு உங்களது வேலையைச் செய்து வர வேண்டும். மீண்டும் எப்பொழுது தாகம் எடுக்கிறதோ அப்பொழுது தான் தண்ணீர் அருந்த வேண்டும். குளிர் பிரதேசங்களில் இருக்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை தாகம் எடுக்கும். ஒவ்வொரு முறையும் கால் லிட்டர் தண்ணீர் அருந்தினால் தாகம் தீர்ந்து விடும். வெயில் பிரதேசத்தில் ஒரு நாளைக்குப் பத்து முறை தாகம் எடுக்கும். 

ஒவ்வொரு முறையும் அரை லிட்டர் தேவைப்படும். குளிர் பிரதேசத்தில் இன்று இருக்கும் ஒரு நபர் அடுத்த நாள் வெயில் பிரதேசத்திற்குச் சென்று விட்டால் அவரது தாகம் மாறும். எனவே தயவு செய்து ஒரு நாளில் இவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் யார் யாரெல்லாம் தண்ணீர் குடிக்கிறீர்களோ அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்குக் குறைவாகவோ உடலுக்குள் சென்று நோயை ஏற்படுத்துகிறது. 

எனவே தயவு செய்து அளவு பார்த்துத் தண்ணீர் குடிக்காதீர்கள். தாகம் எடுத்தால் தேவையான அளவு மீண்டும் தாகம் எடுத்தால் தேவையான அளவு குடித்தால் இன்று உங்கள் உடம்புக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று என்பதை உடம்பே சரியான முறையில் நமக்கு தகவல் தெரிவித்துப் பெற்றுக் கொள்ளும். இதுவே ஒரு நாளில் நாம் குடிக்கும் தண்ணீரின் சரியான அளவாகும்.

No comments:

Post a Comment