Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 27, 2022

தொடக்கக்கல்வி - ஒரு வாரம் மட்டுமே பணிபுரிய தற்காலிக ஆசிரியர் நியமனம் ஏன்?

ஆறு மாதமாக இழுத்து ஒரு வழியாக நிறுத்தி வைக்கப்பட்ட தொடக்கக்கல்வி
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜீலை மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்து உள்ள கல்வித்துறை அதற்கு முன்னதாக ஜீலை முதல் நாள் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு போட்டுள்ளது.

பணிமாறுதல் பெறும் ஆசிரியர் புதிய பணியிடத்தில் சேரும்போது அங்கு ஒரு வாரம் மட்டுமே பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலை உள்ளது.

ஏன் இத்தனை குழப்பங்கள்?

தொடக்கக்கல்வி கலந்தாய்வு முடிந்த பிறகு ஜீலை 10 தேதி முதல் தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் செய்யலாமே!

ஒரு வாரம் மட்டுமே வேலை செய்ய தற்காலிகமாக ஒரு ஆசிரியரை தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டுமா?

இந்த சாதாரண விசயத்தை கூட அதிகாரிகள் யோசித்து முடிவெடுக்காமல் குழப்புவது ஏன் என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு தற்காலிக ஆசிரியர் நியமன தேதியை ஜீலை பத்தாம் தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அமைச்சர் தலையிடுவாரா?

No comments:

Post a Comment