JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த துர்கா என்ற மாணவி பத்தாம் வகுப்பு தமிழ் மொழி பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
தமிழ் மொழி பாடத்தில் அவ்வளவு எளிதில் 100 மதிப்பெண் பெற முடியாது.ஆனால் மாணவர்களால் முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என மாணவி துர்கா நிரூபித்து காட்டியுள்ளார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரின் தந்தை செல்வகுமார் ஆறுமுகநேரி பகுதியில் காவலராக உள்ளார். இந்த மாணவிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 10-ம் வகுப்பு பாடப்பிரிவில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் கணிதத்தில்2186 பேரும், அறிவியலில் 3841 பேரும், சமூக அறிவியலில் 1009 பேரும் 100 % மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.பொதுதேர்வில் பங்கேற்காத மாணவர்களில் 12ம் வகுப்பிற்கு ஜூலை 25-ம் தேதி முதல் உடனடி தேர்வும், 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment