Friday, July 8, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2022

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சிதிருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்:சான்றாண்மை

குறள் : 981.

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

பொருள்: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

பழமொழி :

A good wage gives a good servant.
மாவுக்கு ஏற்ற பணியாரம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.

2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.

பொன்மொழி :

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது. - புத்தர்

பொது அறிவு :

1.விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு எது?

ஜெர்மனி.

2. ஆரோக்கியமான உடலுக்கு எத்தனை வைட்டமின்கள் தேவை ?

13 .

English words & meanings :

sultry - hot and uncomfortable. Adjective. புழுக்கமான. பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

மஞ்சளில் இருக்கும் குர்குமினின் பண்புகள் குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு, படித்து வரப்படுகின்றன; இந்த குர்குமின் எனும் வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்த மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்க முடியும் என்று ஆய்வக ஆராய்ச்சி படிப்பினைகள் தகவல்களை தெரிவித்துள்ளன. இந்த வேதிப்பொருள், கீமோதெரபி சிகிச்சையை அதிக பயனுள்ளதாக மாற்றவும், இயக்கத்தில் இருக்கும் செல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

NMMS Q 20:

மிதிவண்டியில் வடதிசையில் சென்று கொண்டிருக்கும் ஒரு சிறுவன் இடது பக்கம் திரும்பி 1கி.மீ. சென்று பின்னர் மறுபடியும் இடது பக்கம் திரும்பி 2கி.மீ. செல்கிறான். அந்த சிறுவன் தற்போது தொடங்கும் இடத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ. தூரத்தில் இருப்பதாக அறிகிறான் எனில், வடதிசையில் சிறுவன் பயணித்த தூரம்:

விடை: 2 கி.மீ.

நீதிக்கதை

பஞ்சவர்ண கிளி

நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.

அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன.

ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி, அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது.

அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான்.

நீதி :

பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும்.

இன்றைய செய்திகள் - 08.07.22

✅சென்னையில் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்கும் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அமைப்புகளுக்கு தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.

✅ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

✅வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவையில் மிக கனமழை, சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

✅உள்நாட்டிலேயே தயாரித்த விக்ராந்த் கப்பல் கடற்படையில் அடுத்த மாதம் சேர்ப்பு.

✅இந்தியாவில் BA 2.75 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

✅கடும் வறட்சியால் பஞ்சத்தில் மடியும் மக்கள்: துருக்கியிடம் உதவி கேட்கும் சோமாலியா.

✅விம்பிள்டன் டென்னிஸ்: நடால், கிர்கியோஸ் அரையிறுதிக்கு தகுதி.

✅இலங்கை அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அபார வெற்றி.

Today's Headlines

✅Southern Railway has invited various organizations to undertake go green of 21 railway stations in Chennai.

✅Tamil Nadu Pollution Control Board has set up a control room to facilitate the activities related to the effective implementation of the single-use plastic ban. It has been announced that it can be contacted on the toll-free number 1800 425 6750.

✅ Weather forecast: Weighty rain in Nilgiris, Coimbatore, moderate rain likely in Chennai.

✅ The indigenously built Vikrant ship would join the fleet next month.

✅ According to the World Health Organization, a new type of coronavirus, BA 2.75, is spreading in India.

✅ People dying of famine due to severe drought: Somalia asks Turkey for help.

✅ Wimbledon Tennis: Nadal, Kyrgios qualify for semi-finals

✅ Indian women's cricket team beat the Sri Lankan team to a great victory.

Prepared by: Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Join Thamizhkadal WhatsApp Groups

Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top