10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை (27.07.2022) வெளியீடு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, July 26, 2022

10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை (27.07.2022) வெளியீடு!

நடைபெற்ற மே 2022 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் 27.07.2022 ( புதன்கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படும் . www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று " SSLC MAY 2022 RETOTAL RESULT " என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர் , தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சானறிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் 27.07.2022 பிற்பகல் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad