Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 27, 2022

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி; அரசாணை வெளியீடு: 5 நாட்கள் மெனு விவரம்

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

'பசிப்பிணி மருத்துவர்' என்ற புறநானுற்றுப் பாடலை மேற்கோள்கட்டி காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வழிகாட்டு நெறிமுறைகள்:-

தொடக்கப் பள்ளி மாணவ/மாணவியருக்கு காலை உணவு வழங்குதல் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை)

1. குறிக்கோள்கள் :

* மாணவ/ மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதிசெய்தல்
•மாணவ / மாணவியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தலை உறுதி செய்தல்,
•மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல்
•பள்ளிகளில் மாணவ / மாணவியர்களின் வருகையை அதிகரித்தல்/ தக்க வைத்துக் கொள்ளுதல்
• வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல்

II. காலை உணவு வகைகள் :

பின்வரும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும்.

திங்கட்கிழமை - உப்புமா வகை

ரவா உப்புமா + காய்கறி சாம்பார் /சேமியா உப்புமா +காய்கறி சாம்பார்/ கோதுமை ரவா + உப்புமா காய்கறி சாம்பார்

செவ்வாய்க்கிழமை - கிச்சடி வகை

ரவா கிச்சடி / சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி / கோதுமை ரவா காய்கறி கிச்சடி

புதன்கிழமை - பொங்கல் வகை

ரவா பொங்கல் +காய்கறி சாம்பார்/ வெண் பொங்கல்+ காய்கறி சாம்பார்

வியாழக்கிழமை - சேமியா வகை

சேமியா உப்புமா +காய்கறி சாம்பார்/ அரிசி உப்புமா +காய்கறி சாம்பார் / ரவா உப்புமா +காய்கறி சாம்பார் / கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளிக்கிழமை 

ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு வகையின்படி ரவா கேசரி /சேமியா கேசரி

ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை/கோதுமை ரவை / சேமியா / உள்ளூரில் / அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் (சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கி காய்கறியுடன் கூடிய சாம்பார்) . ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.

வழிமுறைகள்

உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் FSSAI நெறிமுறைகளின் படி இருக்க வேண்டும்
உணவு தயாரிப்பதில் வேறு வெளி மூலப் பொருட்களை சேர்க்கக் கூடாது.
உள்ளூர் சமையல் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்
காய்கறிகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்
பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும்
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்

கண்காணிப்பு

இந்த திட்ட செயல்பாட்டை கண்காணிக்க சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்புறம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழு மாநில, மாவட்ட, பள்ளி அளவில் அமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment