ஒரு காலத்தில் தங்கத்திற்கு நிகராக இருந்த மிளகு... பலரும் அறிந்திராத வரலாறு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, July 4, 2022

ஒரு காலத்தில் தங்கத்திற்கு நிகராக இருந்த மிளகு... பலரும் அறிந்திராத வரலாறு

இன்று அனைத்து வீடுகளின் சமயலறையிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மிளகு ஒரு காலத்தில் அரிதாகத் தான் கிடைத்திருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? வாருங்கள் மிளகின் வரலாறு காண்போம்.

சுமார் 500 வருடங்களுக்கு முன் ஒரு மிளகு என்பது அதே எடையுடைய தங்கத்திற்கு சமமாம். அன்றைய காலகட்டத்தில் உலகின் சில இடங்களில் பணமாகவும் மிளகை பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில், மிளகு அப்போது அரிதாகவே இருந்திருக்கிறது. அதிக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே மிளகை வாங்கியுள்ளனர்.

வாசனைத்திரவியமாகவும் பயன்படுத்தியுள்ளனர். எனவே, மிளகை கருப்புத்தங்கம் என்றும் அழைத்துள்ளனர். கி.மு 1000-ஆம் ஆண்டில் தென் அரேபிய வியாபாரிகள் மிளகின் வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உரிமை பெற்றிருந்தனர்.

அதன்பிறகு, இத்தாலி போன்ற நாடுகளுக்கு மிளகு ஏற்றுமதி செய்து வணிகத்தை தொடங்கினர்.சுமார் 4000 மைல்கள் தொலைவு கொண்ட மிக நீண்ட வர்த்தக பாதையான சில்க் சாலை வழியே மிளகாய் கொண்டு செல்ல அதிக செலவானது. இதனால், இத்தாலி வர்த்தகர்கள் தாங்கள் கொண்டு வந்த மிளகை அதிக பணத்திற்கு விற்றனர். இதன்காரணமாக, ஐரோப்பிய நாடுகள் மிளகை வாங்க விரும்பவில்லை.

எனவே, அந்த வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தனர். மேற்கத்திய தீவுகளில், தான் மிளகு என்று நினைத்த ஒரு பொருளை கப்பலில் ஏற்றிக்கொண்டு கொலம்பஸ் சென்றிருக்கிறார். ஸ்பெயின் நாட்டை அடைந்த பின்பு தான், தான் மிளகிற்கு பதிலாக மிளகாய் விதையை கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறார்.அன்றைய காலகட்டத்தில், வாசனைதிரவியத்தில் மிளகு மூலம் மட்டுமே 90% வருவாய் கிடைத்திருக்கிறது. எனவே, வர்த்தகத்தில் பணியறுப்பவர்கள் மிளகை திருடிச்செல்வார்களோ என்ற பயமும் இருந்தது. இதனால், தங்கள் பணியாளர்களின் ஆடைகளில் பை இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர்.

இவ்வளவு சிறப்புமிக்க மிளகு கொடி தாவரத்திலிருந்து தான் பெறப்படுகிறது. கேரளாவில் தான் அதிக மிளகுச்செடிகள் வளர்கின்றன. மிளகுச்செடியில் நூற்றுக்கணக்கான பூக்கள் தோன்றும். அந்த பூக்கள் 8 மாதங்களுக்கு பிறகு மகரந்தசேர்க்கைக்கு உட்படும். அதன்பிறகு, பச்சை நிறத்தில் பழங்களாக மாறும்.அந்த பழங்களை எடுத்து, 4-5 தினங்கள் சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும். அதன்பிறகு, கருப்பு நிறத்தில் மிளகு உருவாகிறது. மிளகின் காரத்தன்மைக்கு அதில் இருக்கும் பிப்பெரின் என்ற இரசாயனம் தான் காரணம். மேலும், மிளகில் பல வைட்டமின்களும் இருக்கிறது.

தமிழ் மருத்துவங்களில் மிளகு இன்றி தயாரிக்கப்படும் மருந்துகள் மிகவும் குறைவு. அன்றைய காலகட்டத்தில் கருப்புத்தங்கம் என்று அழைக்கப்பட்ட மிளகு, இன்று நம் வீடுகளில் சாதரணமாக காணப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad