Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 11, 2022

Team Visit : மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் – ஜூலை 2022

மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் – ஜூலை 2022
( தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை )

தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் 06-07-2022 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் , பள்ளிக்கல்வி ஆணையர் , மாநில திட்ட இயக்குநர் , திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டு மேலான ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதனை செயல்படுத்தி கற்றல் அடைவினை உயர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாடத்திட்டம் – ஒவ்வொரு துணை அலகிற்கும் பாடத்திட்டம் தயாரித்து கற்றல் கற்பித்தல் செய்தல் வேண்டும்.
பாடத்திட்டம் செயல்படுத்துதல் : உரிய வழிமுறைகளில் அனைத்துப் படிநிலைகளைப் பின்பற்றி பாடத்திட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி கற்றல் கருவிகளைப் பயன்படுத்தி கற்பித்தல் நிகழ்வானது வகுப்பறையில் நிகழவேண்டும்
வகுப்பறை மேலாண்மை : ஆசிரியர்கள் பாடத்தினை வழங்கும் போது மாணவர்களுக்கு பல்வேறு கற்றல் செயல்பாடுகளைத் தந்து சிறந்த வகுப்பறை மேலாண்மையைக் கடைபிடிக்க வேண்டும்.
வகுப்பறை மேலாண்மை : கற்பித்தலின் போது ஆசிரியர் எதிர்பார்க்கும் அல்லது சிறந்த உடன்வினையாற்றும் மாணவர்களை அவ்வப்போது பாராட்டும் செயல்பாடானது நடைபெற வேண்டும்.
வீட்டுப்பாடம் : பாடத்திட்டத்திற்கேற்ற திட்டமிடப்பட்ட வீட்டுப் பாடங்களை உடனுக்குடன் வழங்கிட வேண்டும்.
கற்றல் அடைவினை அறிதல் : ஏற்கனவே கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்களை அல்லது வகுப்பறையில் வழங்கும் செயல்பாடுகளை அவ்வப்போது மதிப்பீடு செய்து தேதியிட்டு கையொப்பமிட வேண்டும்.

குறைதீர் கற்றல் : பாடப்பொருளில் உள்ள கடினப் பகுதிகளையோ அல்லது கற்றலில் மெல்ல மலரும் மாணவர்கள் பயனடையும் வகையில் மீள் கற்பித்தல் / புதிய நுட்பங்களைக் கொண்டு கற்பித்தல் / எளிமைப் படுத்தி தொகுத்து வழங்குதல் / தகுந்த காணொலிகளைக் காண்பித்தல் நிகழ்வானது வகுப்பறை கற்பித்தல் செயல்பாட்டின் இறுதியில் நடைபெற வேண்டும்
மாற்றுத்திறனுடைய குழந்தைகளையும் கற்றலில் உள்ளடக்குதல் : மாற்றுத்திறன் மாணவர்களது தேவைக்கேற்ப அவர்களது கற்றல் அடைவினை அறிந்து அவர்களுக்கேற்ற வகையில் கற்பித்தல் அமைவதை ஒவ்வொரு ஆசிரியரும் உறுதி செய்திட வேண்டும்.
கற்றல் அடைவினை அடையச் செய்தல் : ஒவ்வொரு அலகிலும் உள்ள கற்றல் அடைவினை நன்கறிந்து அதற்கேற்ற வகையில் பாடத்திட்டத்தினைத் தயாரித்து அதில் உள்ள கற்றல் அடைவு மாணவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும்.
பாடத்திட்டத்தின் கருப்பொருளைஅன்றாட நிகழ்வுக்கேற்ற வகையில் வழங்குதல் : பாடத்திட்டத்தில் உள்ள கருப்பொருளை அன்றாட நிகழ்வுக்கேற்றவாறு வழங்கிட வேண்டும்.
தலைமையாசிரியரின் கண்காணிப்பு : பள்ளித் தலைமையாசிரியர்கள் நாளொன்றுக்கு ஒரு வகுப்பறையில் மாணவர்களோடு மாணவராக அமர்ந்து ஆசிரியர்களின் பாடக் கற்பித்தலைக் கண்காணித்து உற்றுநோக்கல் பதிவேட்டில் பதிவுசெய்து , அதில் காணப்படும் குறைபாடுகளை தகுந்த முறையில் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் குறைபாடுகளற்ற வகுப்பறையாக அமைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளியின் கட்டமைப்புகள் : பள்ளி உதவி எண்கள், சிறார் உதவி எண் , பாலியல் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் உதவி எண்கள் உள்ளிட்டவற்றை மாணவ மாணவியர் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்புப் பலகையில் தெளிவாக தெரியும் படி வைக்க வேண்டும்.
பெண்களுக்கான கழிவறை : எரியூட்டும் எந்திரம் உள்ளிட்ட கருவிகள் உள்ளடக்கிய பெண்களுக்கான கழிவறைகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். காலமுறையில் சுத்தம் செய்திட வேண்டும்.
சிறுநீர் – கழிவறை பயன்பாடு : ஒவ்வொரு பள்ளியிலும் கழிவறைகள் தூய்மையாகவும் சிறுநீர் கழிக்க தனியான அமைப்பு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். காலமுறையில் சுத்தமாகப் பராமரித்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை பயன்பாடு ஒவ்வொரு பள்ளியிலும் பயன்படுத்தும் வகையில் அமையப்பெற்ற மாற்றுத்திறனாளி கழிவறைகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். அதனையும் தூய்மையாகப் பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
எமிஸ் மாணவர் வருகைப் பதிவு: எமிஸ் மாணவர் வருகைப் பதிவினை ஒவ்வொரு வகுப்பாசிரியரும் அன்ரைய தினம் மாலைக்குள் கட்டாயம் செய்திட வேண்டும். இதனைத் தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவிடப்பட்டிருக்கிறதா என்பதனை தலைமையாசிரியர்கள் மறுநினைவூட்டலுக்கு இடம் கொடுக்காமல் நாள்தோறும் செய்திட வேண்டும்.

இதனை உதவித் தலைமையாசிரியரும் கண்காணிக்க வேண்டும். முதல் பாடவேளை இல்லாத ஆசிரியர்களும் இதற்கு உதவிடலாம்.

எமிஸ் ஆசிரியர்கள் பிற பணியாளர்கள் வருகைப்பதிவு & உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்களை வருகைப் பதிவு : ஆசிரியர்கள் பிற பணியாளர்கள் வருகைப்பதிவு & உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்களை வருகைப் பதிவு நாள்தோறும் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் அல்லாதோரின் வருகையைப் பதிவு செய்திட வேண்டும்.

10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு உயர்த்துதல் : திருவாரூர் மாவட்டம் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காட்டில் மிகவும் பின் தங்கி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வரும் கல்வி ஆண்டில் கணிசமான அளவில் உயர்த்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனை ஆய்வு அலுவலர் வருகையின் போது அலுவலர்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களின் கற்றல் நிலைகளுக்கேற்ப மொட்டு அரும்பு மலர் என வகைப்படுத்தி அவர்கள் முன்னேற்றத்தினை காலமுறையில் கண்காணித்து கற்றல் அடைவினை அனைவரும் அடையும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள கற்றல் அடைவின் எண்ணிக்கையினை அறிந்து அது அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதனை உறுதி செய்திட வேண்டும்.

விலையில்லாப் பொருட்கள் மாணவ மாணவியருக்கு உரிய வழியில் சென்று சேர்வதை உறுதி செய்திட வேண்டும்.
அனைத்து விதமான பதிவேடுகளை சரியாக முரையாகப் பராமரித்திட வேண்டும்
கற்றல் இணைச்செயல்பாடுகள், பிற கற்றல் செயல்பாடுகள், சிறார் திரைப்படம் ஆகியவற்றை அரசின் வழிகாட்டின் படி செயல்படுத்திட வேண்டும்

No comments:

Post a Comment