Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 25, 2022

TET - விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022-ம் ஆண்டுக்கான, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(தாள்1, தாள் 2) அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும், ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4லட்சத்து ஆயிரத்து 886 பேரும் மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள் 2-க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு, சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், ஜூலை 27 ம் தேதி வரை திருத்தம் செய்யஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுஉள்ளது. விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment