டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2' முதல்நிலை தேர்வு முடிவுகள், இந்த மாத இறுதியில் வெளியாகும் என, தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 2, 2 ஏ' பிரிவில், 5,529 பணியிடங்களுக்கான முதல் நிலை தகுதி தேர்வு, மே, 21ல் நடந்தது. இந்த தேர்வில், மாநிலம் முழுதும், 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகளை ஜூனில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுஇருந்தது.
பின், இம்மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என, டி.என்.பி.எஸ்.சி.,யின் உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 24ல் குரூப் - 4 தேர்வு நடக்க உள்ளதால், தேர்வர்கள் நலன் கருதி ஜூலை இறுதியில், குரூப் - 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IMPORTANT LINKS
Monday, July 4, 2022
இந்த மாத இறுதியில் TNPSC குரூப் - 2 தேர்வு முடிவு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment