Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 24, 2022

TNPSC குரூப் 4 தேர்வு : நெறிமுறைகள் வெளியீடு !!

குரூப் 4 தேர்வில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று விட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும், 12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், செல்போன்கள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது என்றும், OMR தாளில் தங்களுடைய பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

OMR தாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை விடைகளாக குறிக்கக்கூடாது என்றும், விடைதெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் Shade செய்ய வேண்டும் எனவும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment