Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 8, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022


திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடி செயல் வகை

குறள் : 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

பொருள்:

உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது

பழமொழி :
Too much rest is rust.

துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன்.

பொன்மொழி :

பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.....ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1. தீப்பெட்டியில் இரு பக்கமும் தடவப்படும் திரவம் எது?

சிவப்பு பாஸ்பரஸ் .

2.ஒரு சிங்கம் சாதாரணமாக எத்தனை அடி தூரம் பாயும்?

20 அடி.

English words & meanings :

neu·ro·ma·ta - a tumor formed of nerve tissue., noun. நரம்பு கட்டி. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

இந்திய சமையலைப் பொருத்த வரை கறிவேப்பிலை என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் கலவைகள் உள்ளன. கறிவேப்பிலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

NMMS Q 37:

கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வார்த்தைகளின் முறையான வரிசை: Learn, Exam, Result, Book.

விடை: Book, Learn, Exam, Result

நீதிக்கதை

சிட்டுக்குருவியின் ஆசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.

இன்றைய செய்திகள் - 08.08.22

* கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

* நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் உட்பட 7 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

* பிஹாரில் பத்து மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் இருந்து நிலத்தடி நீர் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

* தென் அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 121 பேர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர்.

* சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

* உலக ஜூனியர் தடகளம்: தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றுள்ளார்.

* காமன்வெல்த்: குத்துச்சண்டை, மல்யுத்தம், பாரா டேபிள் டென்னிஸ், லான் பவுல்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

Today's Headlines

* The forest department is planning to set up a butterfly park near Kodaikanal to promote tourism and attract tourists in Thandikudi hills.

* On the occasion of the country's 75th Independence Day, the national flag is being sold at post offices for Rs.25.

* According to the Chennai Meteorological Department, 6 districts of Tamil Nadu namely Nilgiris, Coimbatore, Tirupur, Theni, Dindigul and Tenkasi are likely to receive heavy rain.

* The central government has written a letter to 7 state governments including Tamil Nadu asking them to take measures to control the spread of corona virus and to increase vaccination activities.

* Ten districts in Bihar have been found to have uranium above the limit in groundwater. In this case, groundwater from these districts has been sent for testing.

* At least 121 people have been injured in a massive fire caused by lightning at an oil depot in the South American country of Cuba. Many have disappeared.

* Viswanathan Anand from Tamil Nadu has been elected as the Vice President of International Chess Federation (FIDE).

* World Junior Athletics: Tamil Nadu's Selvaprabu won silver.

* Commonwealth: India has won medals in boxing, wrestling, para table tennis and lawn bowls.

Prepared by: Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment