Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 27, 2022

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும்: உயர்கல்வித்துறை

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால் 10ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுகலந்தாய்வு 10ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும் என அவர் தெரிவித்தார். பிறகு செப்டம்பர் 25ம் தேதி 2ம் கட்டமாக 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும்.

அக்டோபர் 13 முதல் 15 வரை 3ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். பின்பு, அக்டோபர் 30ம் தேதி வரை 4வது கட்ட பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித உள்ஒதுக்கீடு வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே 7.5 சதவிதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நவம்பர் 15 முதல் 17ம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும்.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 10 முதல் 20ம் தேதி வரை நடைபெறும். ஆகஸ்ட் 30ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர் மாநாடு நடைபெறும். நடப்பாண்டு முதல் பொறியியல் பாடத்திட்டத்தை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்மொழி பாடம் அறிமுகபடுத்தப்பட உள்ளது என்றும், பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதிகளை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவித இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அவர் தெவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment