12ம் வகுப்பு தேர்ச்சி போதும் எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - முழு விவரம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 19, 2022

12ம் வகுப்பு தேர்ச்சி போதும் எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - முழு விவரம்

எல்லை பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) 11, ஹெட் கான்ஸ்டபிள் (மினி ஸ்டெரியல்) 312 என மொத்தம் 323 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஸ்டெனோ பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். நிமிடத்துக்கு 80 ஆங்கில வார்த்தைகள் சுருக்கெழுத்து, மினிஸ்டெரியல் பணிக்கு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயது : 6.9.2022 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, ஸ்டெனோ, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ.100. எஸ்.சி., எஸ்.டி.. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள் : 6.9,2022

சம்பள விவரங்கள் :

ஹெட் கான்ஸ்டபிள் (மினி ஸ்டெரியல்) : Pay Scale: 25500 - 81100/- Level-4
அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) : Pay Scale: 29200 - 92300/- Level-5

விபரங்களுக்கு : https://rectt.bsf.gov.in/

No comments:

Post a Comment

Post Top Ad