ஐபிபிஎஸ் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 19, 2022

ஐபிபிஎஸ் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐபிபிஎஸ் ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கு விண்ணப்பித்தோருக்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல்த்துறை அமைச்சகத்தின் தாட்கோ நிறுவனம், Veranda RACE என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் சேர்ந்து இலவச பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, தாட்கோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர்/பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. ஐபிபிஎஸ் ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளுக்கான (IBPS CRP PO/MT CRP-XII) போட்டித் தேர்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் வங்கி தேர்வுகளில் ஒன்றாகும் இது உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு www.ibps.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வானது, 11 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய மொத்தம் 6,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 20 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த (BA, B.Com, BSc, B.Tech, etc)அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியின பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

22.08.2022ஆம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

இப்பதவிக்கான தேர்வு முறையானது 3 முறைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலைத்தேர்வு(Prelims), முதன்மைத் தேர்வு(Mains) மற்றும் நேர்காணல்(Interview). முதல் நிலைத் தேர்வானது அக்டோபர் 15, 16, 22 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வானது 26 நவம்பர் 2022 அன்றும், நேர்காணலுக்கான அழைப்பு ஐனவரி/பிப்ரவரி 2023 அன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.52,000/- முதல் ரூ.55,000/- வரை பெறலாம். இப்போட்டி தேர்வில் வெற்றி பெற்று வங்கியில் பணியமர வேண்டுமென Veranda RACE நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க தாட்கோ நிறுவனமானது முடிவு செய்துள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad