Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 19, 2022

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதன்கிழமை (ஆக. 17) தொடங்கிய இந்தத் திட்டம், அக்டோபா் 21-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ், கடைசி பிரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் வரை ஆன பாலிசிகளை வாடிக்கையாளா்கள் புதுப்பித்துக்கொள்ளலாம். யூலிப் பாலிசிகளைத் தவிர அனைத்து பாலிசிகளையும் இந்தத் திட்டத்தின்கீழ் புதுப்பித்துக்கொள்ளலாம்.

ரூ.3 லட்சம் வரையிலான நிலுவைத் தொகை இருந்தால் 25 சதவீதமும் அதற்கு மேல் நிலுவைத் தொகை இருந்தால் 30 சதவீதமும் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

எனினும், நிலுவைத் தொகையைப் பொருத்து அந்தக் கட்டணத்தில் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை தள்ளுபடி செய்யப்படும். மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு தாதமக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment