3 ஆண்டு சட்டப்படிப்பு அவகாசம் நீட்டிப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 19, 2022

3 ஆண்டு சட்டப்படிப்பு அவகாசம் நீட்டிப்பு

தமிழக சட்ட கல்லுாரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்ட படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவுக்கு செப். 19 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும் சட்ட கல்லுாரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சீர்மிகு சட்ட கல்லுாரி 14 அரசு கல்லுாரிகள் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்ட கல்லுாரி ஆகியவற்றில் 1761 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதற்கான விண்ணப்பபதிவு ஆக. 4ம் தேதி துவங்கியது. சட்ட பல்கலையின் www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் ஆக. 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் செப். 19 வரை நீட்டிக்கப்படுவதாக அம்பேத்கர் சட்ட பல்கலை நேற்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad