குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, August 3, 2022

குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு

7301 பதவிக்கு 18.50 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சரை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது: குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள், 8ம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம். வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு www.tnpsc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே தங்களுடைய ஆட்சேபனைகளை அனுப்பலாம்.

TNPSC Group 4 Official Key Answer 2022 Download PDF

No comments:

Post a Comment

Post Top Ad