அனைத்து பள்ளிகளிலும் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, August 10, 2022

அனைத்து பள்ளிகளிலும் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 11.08.2022 முற்பகல் 10.30 மணிக்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே , மேற்கூறிய அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இணைப்பில் கண்டுள்ளவாறு 11.08.2022 அன்று முற்பகல் 10.30 மணிக்கு உறுதிமொழி எடுக்க அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தவும் , அந்நிகழ்விற்குப் பின் நேரலையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்குக் காட்டவும் , உறுதிமொழி எடுத்த விவரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பள்ளிவகை வாரியாக நிரப்பி இவ்வாணையரக இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிற்பகல் 12.30 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியான அறிக்கையினை அனுப்பி வைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

No comments:

Post a Comment

Post Top Ad