அரசு ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் வழங்கும் கம்ப்யூட்டர் பயிற்சி - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, August 11, 2022

அரசு ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் வழங்கும் கம்ப்யூட்டர் பயிற்சி

மைக்ரோசாப்ட் நிறுவனம் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்துடனும், திறன் உருவாக்க ஆணையத்துடனும் இணைந்து பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த 25 லட்சம் ஊழியர்களுக்கு கணினி அறிவை அதிகரிக்கும் பயிற்சியினை வழங்க உள்ளது. இதன் மூலம் பொது மக்கள் சார்ந்த சேவைகளை அவர்களால் சிறப்பாக வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரம் அளிக்கும். இதன் மூலம் சமூகத்தின் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு பயனுள்ள சேவைகளை திறமையாக வழங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் செக்ஷன் அதிகாரிகள், உதவி செக்ஷன் அதிகாரிகள், கிளர்க், அப்பர் டிவிஷன் கிளர்க், லோயர் டிவிஷன் கிளர்க், கீழ்நிலை செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், சமூக நிதி, விமானப் போக்குவரத்து, கப்பல் மற்றும் துறைமுகங்கள், தொழிலாளர் அமைச்சகம் உள்ளிட்டவற்றில் திறன் மேம்பாட்டு திட்டங்களை சிபிசி மேற்கொள்கிறது. இந்த வேலைகளில் இருப்பவர்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் செயலிகளான வேர்ட், எக்சல் மற்றும் பவர்பாய்ன்ட் சமர்பிப்பு போன்றவற்றை தொழில்முறையாக உருவாக்குவதில் பின்தங்கியுள்ளதை பார்க்கிறோம். எனவே அரசின் பங்களிப்பின் கிழ் வழங்கப்படும் பயிற்சியால், அதிகாரிகள் தங்கள் டிஜிட்டல் உற்பத்தி திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவும். அதனால் அவர்கள் பல்வேறு அமைச்சகங்களில் தங்கள் பணியினை திறம்பட நிறைவேற்ற முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad