Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 24, 2022

‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில்.

கரோனா காலத்தில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்காக தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில்.

கரோனா காலம் ஏற்படுத்திய தாக்கம் மற்ற எல்லா வயதினரையும்விட மாணவர்களை பெருமளவில் மனதளவில் பாதித்தது. தற்போது, தான் சார்ந்திருக்கிற ஊரிலேயே இளைஞர்கள் மூலமாக கல்வியை மாணவர்கள் மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஜூலை 8-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சியில் 2 லட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கற்றல் இடைவெளி சீராகும் வரை இத்திட்டம் தொடரும். அது அவசியமும்கூட என தெரிவித்தார்.

No comments:

Post a Comment