JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் க. பொன்முடி பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் நாள்கள், உள் ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் யார் சேர முடியும் என்பது குறித்து தெளிவான விவரங்களை அளித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது, செப்டம்பர் 10ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.
இந்த பொறியியல் கலந்தாய்வில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்கள்ஒதுக்கப்படும். அதாவது, பொறியியல் கலந்தாய்வில் ஒரு சதவீதம் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
சமூக நீதியின்அடிப்படையில் எல்லா பிரிவுகளில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில், அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எட்டாம் வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டமும் இந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது.
நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு
வரும் செப்டம்பர் 10 முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
செப்டம்பர் 10ஆம் தேதி 12ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூன்று நாள்கள் நடைபெறும்.
பிறகு, அக்டோபர் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
அக்டோபர் 29ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரை 4வது கட்ட பொதுப் பிரிவு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.
நவம்பர் 10 முதல் 20ஆம் தேதி வரை எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்தார் அமைச்சர் க. பொன்முடி.
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு எப்போது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
No comments:
Post a Comment