Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 16, 2022

வெயிட் லாஸ் ஆவதற்காக இதை மட்டும் செய்யாதீங்க.. மலச்சிக்கல் ஏற்படும்.. எச்சரிக்கும் மருத்துவர்!

உடல் எடையைக் குறைக்கின்றேன் என்ற பெயரில் கார்போஹைட்ரைட்டேயே எடுத்துக்கொள்ளாமல், வெறும் புரோட்டீன் மட்டுமே எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல்தான் ஏற்படும் என மருத்துவர் பிரசாந்த் அருண் எச்சரித்துள்ளார்.
முன்பை விட உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, உடல் எடையைக் குறைப்பது என்பது எல்லோர் மத்தியிலும் அதிகமாகியுள்ளது. 

இதுவொரு டிரெண்டாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைப்பதற்குக் கடுமையான டயட்டையும் பின்பற்றி வருகின்றனர். இதில் மிகச் சொற்மானவர்கள் மட்டுமே பெர்சனல் டயட்டீஷியன்களை வைத்துக்கொண்டுள்ளனர். பலர் ஆன்லைனில் தேடிப்படித்தது, யூடியுபில் பார்த்த வீடியோக்களில் சொல்லப்பட்டது இவற்றையே கடைப்பிடிக்கின்றனர்.

உடல் எடை குறைக்கவேண்டும் என்றால் வெறும் புரோட்டீன் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் எனவும் கார்போஹைட்ரேட்டை சுத்தமாகத் தவிர்க்கவேண்டும் என்ற கடுமையான ஒரு நம்பிக்கையும் எல்லோர் மத்தியிலும் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு என மருத்துவர் பிரசாந்த் அருண் விளக்கியுள்ளார்.

"உடலுக்கு எப்போதுமே கார்போஹைட்ரேட்(Carbohydreat), ஃபேட் (Fat), ஃபைபர்(Fiber) மற்றும் புரோட்டீன்(Protein) என்ற அனைத்தும் தேவை. முற்றிலுமாக கார்போஹைட்ரேட்டை விலக்கி விட்டு புரோட்டின் மட்டும் எடுத்துக்கொண்டால், உடல் சோர்வாகிவிடும் மூளையின் சிந்திக்கும் திறன் மந்தமாகிவிடும் மேலும் இது மலச்சிக்கலில்(constipation) கொண்டுபோய் விட்டுவிடும்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment