Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 1, 2022

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விக் கட்டணம் விலக்கு: தமிழக அரசு

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய - மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

"கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று கொண்டு இருப்பின் அவர்களுக்கு கல்விக் கட்டணம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தொடர்ந்து, அவர்கள் அதே பள்ளியில் பயில்வதை உறுதி செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பள்ளிகள் இந்தக் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்குக் கருத்துருவினை உடனடியாக தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment