இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இலவச பயிற்சி: சென்னை வேலைவாய்ப்பு அலுவலகம் அசத்தல் அறிவிப்பு.. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, August 13, 2022

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இலவச பயிற்சி: சென்னை வேலைவாய்ப்பு அலுவலகம் அசத்தல் அறிவிப்பு..

இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு, சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை கடந்த ஜுலை மாதம் வெளியிட்டது.

இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) வரை இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/பெண் மற்றும் திருநங்கைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊதிய விகிதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித் தேர்வர்கள் பயன்படும் வகையில் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பை அறிவித்துள்ளது. 

இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கும் இந்த பயிற்சி வகுப்பில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அட்டை, தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம்,
ஆலந்தூர் ரோடு, திரு வி.க இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி,
சென்னை, தமிழ்நாடு 600032.
தொலைபேசி: 044-22501002, 044-22501006
மின்னஞ்சல்: tnvleportal@gmail.com

No comments:

Post a Comment

Post Top Ad