இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமல் போக்கும் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, August 6, 2022

இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமல் போக்கும்

இயற்கையான முறையில் உடல் எடையை குறைத்து கண்ணுக்கு குளிர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும் ஐந்து பானங்கள்.

காலையில் வெறும் வயிற்றில் இந்த 5 பொருட்களை வெந்நீரில் குடித்து வந்தால் தொப்பை படிப்படியாக குறையும், உடல்ஆரோக்கியம்மேம்படும். 

தொப்பை கொழுப்பு என்பது பலருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தாலும், உண்மையில் சரியான முறையில் முயன்றால் அது சுலபமானதே. வயிற்றை சுற்றி படிந்திருக்கும் கொழுப்பைக் குறைக்க கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் ஒட்டுமொத்த உடல் எடையைவிட, தொப்பையால் நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.

வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க, வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர, நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. இது தவிர, சிலஆரோக்கியமான பானங்கள்குடிப்பதும் தொப்பையை வேகமாக குறைக்க உதவுகிறது.

தேன்-எலுமிச்சை மற்றும் வெந்நீர்

தொப்பையை மட்டுமல்ல உடல் பருமனையும் குறைக்க எளிதான மற்றும் பிரபலமான செய்முறை எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் வெந்நீர் கலந்து பருகுவது ஆகும். எலுமிச்சையில் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உடலை உள்ளே இருந்து வலிமையாக்குகின்றன.

இதைத்தவிர எலுமிச்சையில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து, கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. காலையில் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து குடிக்கவும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் குரோமியம் என்ற தனிமம் உள்ளது, இது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு கூறுகள் நிறைந்த நெல்லிக்கனி, செரிமானத்தை அதிகரிக்கவும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் செயல்படுகிறது.

செரிமான சக்தியை அதிகரிப்பதன் மூலம், குடல் இயக்கம் மேம்படுகிறது, வயிற்று பிரச்சனைகளை குறைப்பது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. நெல்லிக்காயை அரைத்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் குடிக்கவும். இதேபோல், நெல்லிக்காய் சிரப் அல்லது முன் தயாரிக்கப்பட்ட சாறும் நல்ல பலனளிக்கும்.

சீரகத் தண்ணீர்

குளிர்ச்சியான பண்புகளைக் கொண்ட சீரகம் வயிற்றை குளிர்விக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, எடை இழப்புக்கு உதவுகிறது. சீரகத்தில் இயற்கையான நச்சு நீக்கும் கூறுகள் நிறைந்துள்ளன.சீரகம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் செயல்படுகிறது. வெறும் வயிற்றில், சீரகத்தை தண்ணீருடன் கொதிக்க வைத்து குடிக்கலாம். வெறும் வயிற்றில் குடிப்பதோடு, சீரகத் தண்ணீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.

மசாலா நீர்

சோம்பு, சீரகம் மற்றும் வெந்தயம் என மூன்று பொருட்களை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில் குடிக்கவும். அஜீரணத்தைக் குறைக்கும் சோம்பு பானம், வீக்கத்தைக் குறைக்கும். வயிற்று கொழுப்பைக் குறைப்பதில் நன்மை பயக்கும் இந்த பானம் சர்வரோக நிவாரணியாகவும் செயல்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad