பாதாமை விட சிறந்தது! ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு - என்ன அது? எவ்வளவு பலன்கள்? - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 19, 2022

பாதாமை விட சிறந்தது! ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு - என்ன அது? எவ்வளவு பலன்கள்?

நட்ஸ் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், எந்த நட்ஸ் எந்தளவுக்குச் சாப்பிட வேண்டும் என்ற அளவுமுறை தெரியாது. உடல் வலிமைக்கு, முடி வளர்ச்சிக்கு நட்ஸ் சாப்பிடுவார்கள் அதிகம். நட்ஸ் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்கலாம் எனப் பார்க்கலாம்.

வால்நட்டை 'அக்ரூட்' என்றும் சொல்கிறார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் அதிக அளவில் இருக்கும் ஒரு வகை நட்ஸ், வால்நட்ஸ். நினைவுத் திறனை அதிகரிப்பதில் நம்பர் 1. நல்ல கொழுப்பு நிறைந்து உள்ளதால் இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும். இதய நோயாளிகளும் வால்நட்ஸ் சாப்பிடலாம்.
உடலின் கொழுப்பு

உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இரண்டும் இருக்கும். அதில் கெட்ட கொழுப்பைக் கரைக்கக் கூடிய ஆற்றல், வால்நட்டுக்கு உண்டு. ஆயுர்வேத முறைப்படி செரிமானத்துக்கான நெருப்பை (தீயை), அதாவது வெப்பத்தைக் கொடுக்கும். ஆதலால், வால்நட் சாப்பிடுவது நல்லது என ஆயுர்வேதம் சொல்கிறது. ரத்த நாளங்களில் உள்ள பிளாக்கேஜஸ், டாக்ஸின்ஸ்களை அழிக்கிறது.

டைப் 1 மற்றும் டைப் 2 நோயாளிகள், வால்நட் சாப்பிட்டு வரலாம். செரிமானத்துக்கு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வாதம், பித்தம், கபம் போன்ற நிலைகளைச் சமன் செய்கிறது

மலச்சிக்கல் இருப்பவர்கள் வால்நட்ஸ் சாப்பிடலாமா?

கட்டாயமாக. லாக்ஸேடிவ் சத்துகள் உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும். வயிற்றுப்போக்கு, பேதி சமயத்தில் மட்டும் வால்நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

ரத்த அழுத்தத்துக்கு நல்லதா?

ஆம், அதிக அளவு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இதைச் சாப்பிடுவதால் ஆரோக்கியம் கிடைக்கும். ஆனால், அதிக அளவில் எடை கூடாது. வெயிட் அதிகருக்குமா எனக் கவலை வேண்டாம்.

பருக்கு நல்லதா?

வால்நட்ஸில் எண்ணெய் பசை உள்ளது. ஆகையால் பரு வருபவர்கள் வால்நட்ஸ் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. கண்டிப்பாகச் சாப்பிடலாம். பரு இருப்பவர்கள் சாப்பிட்டால், பருவில் உண்டாகும் சிவப்பு தன்மை, வீக்கம் ஆகியவை குறையும்.
ஆண்மைக் குறைவு, விந்தணுக்கள் குறைவு

குழந்தையின்மை பிரச்சனை உள்ள ஆண்கள் சாப்பிட வேண்டியது, வால்நட்ஸ். விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். அதன் தரத்தை மேம்படுத்தும். மேலும், முக்கியமாக அளவையும் அதிகரிக்கும். தினமும் வால்நட் சாப்பிடுவதால், தாம்பத்திய வாழ்க்கைக்குத் தேவையான பலமும் கிடைக்கும்.

பாதாமைவிட வால்நட்ஸ் சிறந்ததா?

பாதாம், வால்நட் என இரண்டுமே சூப்பர் ஃபுட்ஸ் என்கிறார்கள். மூளைக்கான உணவுகள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ்ன் அளவு மட்டும்தான் இரண்டிலும் மாறுபடுகிறது. பாதாமைவிட வால்நட்ஸில் ஒமேகா 3 சத்துகள் அதிகம்.
வால்நட்டை ஊற வைக்கவேண்டுமா?

எல்லா நட்ஸ்களிலும் சில என்ஸைம்கள் இருக்கும். ஆதலால் ஊறவைப்பதால் அவை நீங்கிவிடும். செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும், 5-6 மணி நேரம் வால்நட்ஸை ஊறவைத்த பின் சாப்பிடலாம். 6 மணி நேரத்துக்குப் பிறகு ஊற வைக்கக் கூடாது. நல்ல செரிமான ஆற்றல் இருப்பவர்கள், வால்நட்ஸை அப்படியே சாப்பிடலாம்.

எவ்வளவு வால்நட்ஸ் சாப்பிடலாம்?

மூளைக்கான சிறந்த உணவு என்கிறது நவீன அறிவியல். மழை மற்றும் குளிர் காலங்களில் 3-4 வால்நட்களை ஒரு நாளைக்கு ஒருவர் சாப்பிடலாம். இதுவே வெயில் காலத்தில் 2-3 வால்நட்ஸ்களை சாப்பிடலாம் என்கிறது நவீன அறிவியல்.

உங்களுக்குச் செரிமானச் சிறப்பாக இருந்தால் நீங்கள் எல்லாக் காலத்திலும் 4-5 வால்நட்களைச் சாப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம்.

வால்நட்ஸ் எவ்வளவு காலம் வரை கெட்டு போகாது?

சாதாரணமான வெப்ப சூழலில் 6 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்து இருந்தால் ஒரு ஆண்டு வரை கெட்டு போகாது. அதுவே, ஃபீரிசரில் வைத்தால், 1-2 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.
அதிக அளவில் வால்நட்ஸ் சாப்பிடலாமா?


எந்த உணவுமே அளவுக்கு மீறினால், பிரச்சனைதான். அளவுக்கு அதிகமாக வால்நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகம் உண்டால், செரிமானத் தொந்தரவு ஏற்படலாம். வாயுத் தொல்லை உருவாகலாம்

புற்றுநோயாளிகள் சாப்பிடலாமா?

மார்பக புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், அந்தப் புற்றுநோய் செல்களை அழிக்க வால்நட் உதவும். தேவையான அளவு தினமும் சாப்பிட்டு வர புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படும்.
வால்நட் எண்ணெய்

இதன் எண்ணெய்யை நிறைய காஸ்மெட்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பொருட்களில் சேர்க்கிறார்கள். முகத்தில் வருகின்ற பருக்கள், கட்டிகள், சுருக்கங்கள், உலர்ந்து போகின்ற சருமத்தைச் சரி செய்ய வால்நட் எண்ணெய் உதவுகிறது. இளமையான தோற்றத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

முகச் சுருக்கங்களைப் போக்கத் தேங்காய் எண்ணெய்யுடன் வால்நட் எண்ணெய்யும் கலந்து பயன்படுத்தலாம்.

முடிக்கு என்ன பலன்?

வால்நட்ஸை சாப்பிடுவதாலும் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனுடன் தேங்காய் எண்ணெய்யோடு வால்நட் எண்ணெய்யையும் கலந்து தடவி வந்தாலும் முடி வளர்ச்சி வேகமாக இருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad