உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்... ஏன் தெரியுமா..? - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, August 25, 2022

உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்... ஏன் தெரியுமா..?

கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழவகைகளில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று. இந்த பழத்தை பல விதமாக உண்ணலாம். பொதுவாக அப்படியே முழு பழமாக சாப்பிடுவது வழக்கம். ஆனால், சாலட்டாக , புளிப்பு சாஸ் அல்லது சட்னியாக, இனிப்பு ஜாம் அல்லது முழுதாக பழுக்காத கொய்யாக்க்காயை சமைத்தும் சாப்பிடலாம்.

பழம் மட்டுமின்றி, கொய்யாவின் இலைகளும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கொய்யா இலைகளின் சாறு அல்லது பொடியை உணவில் சேர்ப்பது, உங்கள் செரிமானம், இதய ஆரோக்கியம், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. ஆனால், இந்த பழத்தில் உள்ள சில காம்பவுண்டுகள் காரணத்தால், இந்த பழத்தை அனைவரும் சாப்பிட முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, இதய பாதிப்புகள் கொண்டவர்கள், கொய்யாவைத் தவிர்க்க வேண்டும்.

கொய்யாவில் இருக்கும் ஊட்டச்சத்துகள்: கொய்யா பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது. ஒரு கொய்யாவில், 112 கலோரிகள், 23 கிராம் கார்போஹைட்ரேட், மற்றும் 9 கிராம் நார்ச்சத்து, 1.6 கொழுப்பு மற்றும் 4 கிராம் புரதம் உள்ளது. 

அது மட்டுமின்றி, இதில் ஸ்டார்ச் இல்லை. பல ஆய்வுகள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு கொய்யா பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன. ஃபோலேட், பீட்டா கரோட்டீன் ஆகிய சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. பின்வரும் உடல் நிலைக் கோளாறுகள் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வயிறு உப்பசத்தால் அவதிப்படுபவர்கள்: கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். நீரில் கரையக்கூடிய வைட்டமினாக இருப்பதால், வைட்டமின் சி-யை உடல் ஏற்றுக்கொள்வது கடினமாக மாறும். இதுவே ஃப்ருக்டோஸுக்கும் பொருந்தும். 40 சதவிகிதத்தினர், ஃப்ருக்டோஸ் மால்அன்சார்ப்ஷன் எனப்படும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை உடல் கிரகிக்க முடியாத காரணத்தால், கொய்யா சாப்பிடுவது வயிறு உப்பசத்தை அதிகரிக்கும்.

குடல் எரிச்சல் (இர்ரிடபில் பௌல் சிண்ட்ரோம்): நார்ச்சத்து நிறைந்த கொய்யா, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆனால், அதிகப்படியான கொய்யா உண்பது உங்கள் செரிமானத்தை பாதிக்கும். குறிப்பாக, உங்களுக்கு இர்ரிட்டபில் பௌல் சிண்ட்ரோம் என்ற குடல் எரிச்சல் நோய் இருந்தால், நீங்கள் கொய்யா சாப்பிடுவதைத் தவிர்க்க அல்லது குறைக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள்: கொய்யாவில் இருக்கும் குறைவான கிளைகெமிக் இன்டக்ஸ் காரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா சிறந்த பழமாகக் கருதப்படுகிறது. ஆனால், கொய்யாவை நீங்கள் தினசரி சாப்பிட்டாலோ அல்லது அதிகமாக சாப்பிட்டாலோ, உங்கள் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். 100 கிராம் கொய்யாவில் 9 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, கிளைகெமிக் குறைவாக இருந்தாலும், கொய்யாவை குறைவான அளவிலேயே உண்ண வேண்டும்.

குறைந்த அளவு மற்றும் சரியான நேரம்: எந்த உணவாக இருந்தாலும், நீங்கள் உண்ணும் அளவை கவனிக்க வேண்டும். கொய்யாவை குறைவான அளவிலே உண்ண வேண்டும். நீங்கள் உணவுக்கு இடையே, அல்லது உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடலாம். இரவு நேரத்தில் கொய்யா சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad