JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - பூரணக் கொழுக்கட்டை!
தேவையான பொருள்கள்:
தேங்காய் துருவல் - 1 கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவைப்பட்டால்
செய்முறை:
கடாயில் அரை கப் அளவுக்கு தண்ணீர் வைத்து, தண்ணீர் சூடானதும் இதில் வெல்லத்தைப் போட்டு கரைய விட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் அதை அடுப்பில் வைத்து, ஏலக்காய்ப் பொடி மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறுங்கள். எல்லா பொருள்களும் ஒன்று சேர்ந்து வரும்போது இறக்கி, சிறிது ஆறவிட்டு உருண்டை செய்து கொள்ளுங்கள்.
அரிசி மாவை கிளறி சொப்பு செய்து அதற்குள் இந்த தேங்காய்ப் பூரணத்தை வைத்து, மூடி ஆவியில் வைத்து வேகவிடுங்கள்.
சுவையான சூப்பர் தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி!
No comments:
Post a Comment