அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவ விழிப்புணர்வு புதிய திட்டம் தொடக்கம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 12, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவ விழிப்புணர்வு புதிய திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதர் ஜூடித் ரேவின் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.

‘நம்பிக்கையையும், மரியாதைளோம்யையும் ஏற்படுத்தும் ஆண்கள்’ (Men Impacting Trust and Respect-MITR) என்ற கருப் பொருளில் உருவாகியுள்ள இந்தத் திட்டம் ‘புத்ரிஇலக்கு’ என்ற பெயரில் அவதார் மனிதவள அறக்கட்டளை என்ற அமைப்பின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது. திட்டத்தின் நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் பங்களிப்பை வழங்கும் பெரு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களது அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளிகளில் ‘புரஜெக்ட் புத்ரி’ என்ற திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்குக் கல்வி, முடிவெடுக்கும் திறன், மேடைகளில் பேசுவது, பிரச்னைகளில் முடிவெடுக்கும் திறன், குழு விவாதம் போன்ற பல திறன்களில் பயிற்சிகள் வழங் கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தத் திட்டம் தொடங்கப் பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ‘புத்ரிஇலக்கு’ என்ற பெயரில் திட்டத்தை தொடங்கியுள்ளோம் .

வளரிளம் பருவத்திலுள்ள மாணவர்கள், அடுத்த பாலினத்தைச் சேர்ந்த பெண்களின் உணர்வுகளை சரியாகப் புரிந்த நபர்களாக உருவாகுவதற்கென இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது. மேலும், வளரிளம் பருவத்திலிருந்து, பெரியவர்களாக ஆகும் போது, அனைத்துப் பாலினத்தவரையும் உள்ளடக்குகின்ற, சமத்துவமாக நடத்துகின்ற, சிறப்பான எதிர்காலத்துக்கு வழிவகுக்கின்ற நல்ல குடிமக்களாக அவர்களை தயார் செய்வது இதன் மற்றொரு குறிக்கோளாகும்.

இந்தத் திட்டத்தின்படி அர சுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாண விகளுக்கு தனக்கான திறன்கள், பிற நபர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான திறன்கள், சுய மேலாண்மைத் திறன்கள் மற்றும் பாலின விழிப்புணர்வு என்ற நான்கு முக்கியப் பிரிவுகளின் பயிற்சிகள் அளிக்கப்படும். சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இதற்கான பயிற்சிகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகளை நடத்தவுள்ளோம் இது குறித்து அறக்கட்டளை அந்த அறக்கட்டளையின் நிறுவனர் சௌந்தர்யா ராஜேஷ் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad