உரிய காலத்தில் பதவி உயர்வு - தலைமைச் செயலாளர் உத்தரவு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 5, 2022

உரிய காலத்தில் பதவி உயர்வு - தலைமைச் செயலாளர் உத்தரவு

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலயே பணப் பலன்களை சிலர் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் அரசிடம் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் செயற்கை காலிப்பணியிடங்களை ஏற்படுத்துதலை தவிர்க்க வேண்டும் என்றும் தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்குமாறு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவு அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad