Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 31, 2022

நீட் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்.7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் , விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமை ( என் டிஏ ) இணையதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட. விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் , ரூ .200 பதிவுக் கட்டணம் செலுத்தி அதுகுறித்து புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் , பிடி.எஸ் , இயற்கை மருத்துவப் படிப் புகள் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 - ஆம் தேதி நடைபெற்றது . நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் சென்னை , கோவை , கடலூர் , காஞ்சிபுரம் , கரூர் , மதுரை , நாகர்கோவில் , நாமக்கல் , சேலம் , தஞ்சாவூர் , திருவள்ளூர் , திருச்சி , திருநெல் வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் 200 - க்கும் மேற் பட்டமையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நிக ழாண்டு நீட் தேர்வுக்கு தமிழ கத்தில் 1.41 லட்சம் பேர் விண் ணப்பித்திருந்தனர். அவர்க ளில் 90 சதவீதத்துக்கும் மேற் பட்டோர் தேர்வில் பங்கேற்ற தாக மருத்துவக் கல்வி இயக்கசு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி , தெலுங்கு , கன்னடம் , குஜ ராத்தி , மராத்தி , ஓடியா , அஸ் ஸாமி , வங்காளம் , உருது உள் ளிட்டமொழிகளில் தேர்வு நடைபெற்றது.

அதற்கான முடிவுகள் வரும் செப் . 7 - ஆம் தேதி வெளியாக வுள்ள நிலையில் விடைக்குறிப்புகள் என்டி.ஏ இணையதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியாகின.

No comments:

Post a Comment