Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 30, 2022

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?

நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. அன்றைக்கு புதிய விநாயகர் திருவுருவத்தை மண்ணிலோ மஞ்சளிலோ அல்லது பிற மங்கலப் பொருள்களிலோ செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியே விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை நாளை (10.9.2021) கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் நாள் முழுவதுமே விநாயகரை வழிபடலாம் என்றபோதும், பூஜை செய்ய உகந்த நேரம் என்ன என்பது குறித்து முத்துக்குமார சிவாசார்யரிடம் கேட்டோம்.

விநாயகர் சதுர்த்தி

`` ஒவ்வோர் ஆண்டும் வரும் விநாயகர் சதுர்த்தி என்பது மிகவும் அற்புதமான தினம். இந்த நாளில் நாம் விக்னேஸ்வரனை வழிபாடு செய்ய வேண்டும். நம் விக்னங்கள் எல்லாம் விலக வேண்டும் என்று வேண்டிப் பூஜை செய்ய வேண்டிய நாள். அப்படி நாம் பூஜிக்கும்போது நம் வினைகளை எல்லாம் அகற்றி நல்லருள் தருவார் விநாயகப்பெருமான். அப்படிப்பட்ட விக்னேஸ்வரன் அவதரித்த நாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நாள் முழுவதுமே பூஜை செய்துவழிபட உகந்ததுதான். என்றாலும் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்து வழிபடுவது சிறந்தது.

நாளை (10.9.2021) வெள்ளிக்கிழமை. இந்த நாளில் காலை 6 மணி முதல் 9 மணிவரை, காலை 10 மணி முதல் 10.30 மணிவரை, பகல் 1 மணி முதல் 3 மணிவரை, சில குடும்பங்களில் விநாயகரை மாலையில் வழிபடும் வழக்கம் உண்டு. அவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் செய்யலாம்" என்று தெரிவித்தார் முத்துக்குமார சிவாசார்யர்.

விநாயகர் சதுர்த்தி விநாயகரை வழிபடுவது மிகவும் எளிமையானது. இந்த பூஜையை மிக சுருக்கமாக 15 நிமிடங்களில் செய்யலாம் என்கிறார் முத்துக்குமார சிவாசார்யர். எப்படி 15 நிமிடங்களில் பூஜை செய்வது என்று அவரே விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான மந்திரங்களைச் சொல்லி எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்.

No comments:

Post a Comment