வயிறு கோளாறு ஏற்படும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, August 28, 2022

வயிறு கோளாறு ஏற்படும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?

உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நமது செரிமான மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது.

வைரஸ்கள் தாக்குவதால் சில நேரங்களில் இரைப்பை குடல் அழற்சி ஏற்படும். இது வயிற்று காய்ச்சல் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. வயிற்றில் ஏற்படும் இந்த வகை தொற்று முழு அமைப்பையும் சீர்குலைத்து, உடலை பலவீனமாக்குறது. இந்த வைரஸ் தொற்றானது பொதுவாக அசுத்தமான நீர் அல்லது உணவை உட்கொள்வதன் மூலமாக குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை உருவாக்குகிறது.

வயிறு தொந்தரவு கொடுக்கும் போது எதையும் சாப்பிட தோணாது என்றாலும், இந்த சமயத்தில் அதிக நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால், சரியான உணவை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியமாகும். அதேசமயம் வயிற்று பிரச்சனையின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். வயிற்று தொற்றினால் அவதிப்பட்டு மீண்டு வருபவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான, இயற்கையான மற்றும் ஊட்டமளிக்கும் உணவுகள் பற்றி விரிவாக பார்க்கலாம்...

1. வாழைப்பழம்:

வயிற்றுக் காய்ச்சலின் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், எளிதில் ஜீரணமாக கூடிய எளிமையான உணவுகளை உட்கொள்வது ஆகும். இந்த மாதிரி சமயத்தில் எளிதில் ஜீரணிக்க கூடிய, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் இழந்த பொட்டாசியத்தை திரும்ப பெற உதவும் உணவுப்பொருளாக வாழைப்பழம் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பெக்டின் குடலில் உள்ள அதிகப்படியான திரவத்தை உறிஞ்சிவிடும். இது உங்கள் மலத்தை உறுதியாக்கி, வயிற்றுப்போக்கின் கால அளவைக் குறைக்க உதவும்.

2. அரிசி சாதம்:

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கவும், எளிதில் செரிமானமாகவும் வெள்ளை அரிசி சாதம் சிறந்த ஒன்று. வயிற்றுக் காய்ச்சலின் போது வாந்தி முக்கியமான அறிகுறியாக இருப்பதால், அதனால் இழக்கப்படும் சத்துக்களை ஈடு செய்ய அரிசி சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் உதவுகிறது. குறிப்பாக மசாலா கலந்த சாதத்திற்கு பதிலாக உப்பு கலந்த வெள்ளை அரிசி சாதத்தை மதியம் அல்லது இரவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக மென்று மொதுவாக சாப்பிடுவது ஜீரணத்தை மேலும் எளிமையாக்க உதவும்.

3. இளநீர்/ தேங்காய் தண்ணீர்:

வயிற்றுப்போக்கால் ஏற்படும் மிகவும் மோசமான பிரச்சனைகளில் ஒன்று நீரிழப்பு, எனவே உடலை நீரிழப்பு ஆகாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். வயிற்றுப்போக்கு சமயத்தில் வெறும் தண்ணீரை விட எலக்ட்ரோலைட்டுகளின் இயற்கை மூலமான இளநீரைக் குடிப்பது சிறந்தது. தேங்காய் நீரில் பொட்டாசியம் நிறைந்துள்ளது மற்றும் சோடியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

4. தயிர்:

வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்க உதவும் மற்றொரு முக்கியமான உணவுப்பொருள் தயிர் ஆகும். மதிய உணவு அல்லது இரவு உணவின் போது இதனை அரிசி சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர். இரைப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள குடலை, நன்மை அளிக்க கூடிய பாக்டீரியாக்களை நிரப்ப தயிர் பயன்படுகிறது. இதில் உள்ள புரோபயாடிக் வயிற்றுப்போக்கு, குடல் வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

தயிர் உங்கள் வயிற்றைக் குறைக்க உதவும் மற்றொரு சிறந்த உணவுப் பொருள். திருப்திகரமான, சத்தான உணவுக்காக, மதிய உணவு அல்லது இரவு உணவின் போது நீங்கள் அதை உங்கள் அரிசியுடன் இணைக்கலாம். இரைப்பைக் கோளாறுக்குப் பிறகு இழக்கப்படும் நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை நிரப்ப தயிர் உதவும். இது புரதத்தின் வளமான மூலமாகும், இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

5. தவிர்க்க வேண்டிய உணவுகள்:

வயிற்றுக் காய்ச்சல் அல்லது ஃபுட் பாய்சனின் போது தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன.வறுத்த உணவு பொருட்கள் ஜீரணமாக்குவதை கடினமாக்கும், காரமான உணவுகள் குமட்டல் மற்றும் வாந்தியை அதிகரிக்க கூடும். காபி போன்ற காஃபின் கலந்த பானங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வயிற்றை மேலும் எரிச்சலடைய செய்யும்.

வயிற்றுக்காய்ச்சலின் போது உடல் அதிகப்படியான நீரை இழப்பதால் மது அருந்த வேண்டாம். ஏனெனில் மதுவில் உள்ள டையூரிடிக் உடலில் நீரிழப்பை அதிகரிக்க கூடும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தவிர்க்கவும்.வயிற்றுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், பால் மற்றும் பால் பொருட்களையும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை ஜீரணிக்க கடினமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad