Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 12, 2022

தமிழகத்தில் புதிய யானைகள் காப்பகம் - மத்திய அரசு அறிவிப்பு.


தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அகஸ்தியர் மலையில் உள்ள 1197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை யானைகளுக்கான பிரத்யேக காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்தது.

அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்றப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருந்தது. 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் படி 2,761 யானைகள் இருப்பது அகத்தியர் மலையில் இருப்பது தெரியவந்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான அகத்தியர் மலை தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில வனப்பகுதிகளிலும், கேராளாவின் கொல்லம், திருவனந்தபுரம், மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.

இதன் அடிப்படியில் சட்டப்பேரவை அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்ற வலிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்றப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அகஸ்தியர் மலையில் உள்ள 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment