JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியினை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை இன்று முதல் வரும் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினி பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட்டது. கடந்த ஜுலை மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்று உள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்திருந்ததாகவும், ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை என்று கடந்த 18ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
மேலும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு 11-12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலைப் பட்டம் (UG Degree), முதுகலைப் பட்டம் (PG Degree) கல்வியியல் இளங்கலைப் பட்டம் (B.Ed. Degree) மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (B.Ed. Degree மற்றும் MPEd. Degree) என தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் உரிய அலுவலரின் ஒப்புதல் பெற்று அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கல்வி தகுதியினை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான இணைய சேவையை தேர்வு வாரியம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி trbpg2021 என்ற இணைய பக்கத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்தி வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு பொருந்தும்:
விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை 'ஆம்' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும். எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தேர்வு வாரியம் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
சந்தேகங்களுக்கு trbpgpgcipdgrievance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தகவல் பெறலாம்.
No comments:
Post a Comment