குரூப் I தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, August 15, 2022

குரூப் I தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 வகையான குரூப் 1 பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. வரும் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரூப் 1 தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "இம்மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட தேர்வர்கள் பயனடையும் வகையில் குரூப் I தேர்விற்கான அறிவிப்பே வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 16 அன்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 1000 மணி முதல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/2Zmak31 என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். குரூப் I போட்டித் தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad