இனி தமிழ் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.! ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு.! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, August 21, 2022

இனி தமிழ் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.! ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு.!

TRB பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக தமிழை தகுதித் தேர்வாக, விரிவுரையாளர் தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில்; தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவேண்டும். அவ்வாறு தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பிராதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், பேராசிரியர் ஆகிய 155 பணியிடங்களுக்கு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் என்கிற முறை அறிமுகம் விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற வேண்டும் என்கிற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad