Friday, September 9, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2022

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: இரவு

குறள் : 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

பொருள்:
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.

பழமொழி :

Courage and perseverance conquer all before them.
வீரமும், விடாமுயற்சியும் அனைத்தையும் வெல்லும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தேனீ எறும்பு போல சுறுசுறுப்பாக உழைக்க முயற்சிப்பேன். 

2. என்னுடைய உழைப்பு பெயருக்காக அல்ல பேர் வாங்கும் அளவுக்கு உழைப்பேன்.

பொன்மொழி :

தனி நபர்களை ஒருவர் கொல்வது எளிது. ஆனால், அவர் கூறிய கருத்துகளை யாராலும் கொல்ல முடியாது - பகத்சிங்

பொது அறிவு :

1.மனிதன் வாழ தேவையான ஆக்ஸிஜன் எவ்வளவு? 

6.9% . 

 2.ஓர் உடலின் வேதிச் செயல்களை செய்வது எது? 

என்சைம்.

English words & meanings :

i·so·la·tion - the state of being separate and alone. Noun. He lived in complete isolation from the outside world. தனிமைப்படுத்துதல். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

தேங்காய் எண்ணெயில் மிக அதிக அளவில் லாரிக் அமிலம் இருக்கிறது. தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, அதில் உள்ள ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் ஆகியவை உடலில் நோய் தொற்றுக்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

அதனால் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காயில் செய்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது உடலில் தொற்றுக்கள் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

NMMS Q 56:

Desert : Sand :: Sea : ? a) water b) tide c) fish d) crocodile 

 Answer : water

செப்டம்பர் 09


மா சே துங்  அவர்களின் நினைவுநாள்




மா சே துங் (About this soundMao Zedong Mao Zedongடிசம்பர் 261893 – செப்டம்பர் 91976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 11949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்

நீதிக்கதை

நீங்கள் தான் கடவுள்

ஒரு ஊரில் கணவனை இழந்த சீதா என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை. அவள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் அவளால் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலை. எனவே குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்துவிட்டு, இவள் தினமும் வேலைக்குச் செல்வாள்.

இப்படி இருக்க ஒருநாள் மாலை நேரம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது வீட்டு வேலைக்காரி தொலைப்பேசியில் அழைத்து குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறினாள். அலுவலகத்தில் இருந்து கிளம்பி மருந்து வாங்க மருந்துக் கடைக்கு சென்றாள். மருந்து வாங்கிவிட்டு தனது மகிழுந்திடம் வந்தாள். மகிழுந்தின் சாவியை உள்ளேயே வைத்து பூட்டியதை உணர்ந்தாள்.

என்ன செய்வது எனத் தெரியவில்லை. வீட்டில் இருந்து வேலைக்காரி மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகிறது என்று கூறினாள். சீதாவிற்குக் கண்கள் கலங்கின. இறைவா... எனக்கு உதவி செய் எனக் கடவுளிடம் கண்ணீர் வர வேண்டினாள். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஒருவர் நீண்ட முடியும் தாடியும் வைத்துக்கொண்டு பல நாள் குளிக்காத ஒரு முரடன் போல வந்து சேர்ந்தார்.

சீதா கடவுளே... இது தான் நீ செய்த உதவியா...? என்று மனதில் நினைத்துக்கொண்டு வந்தவரிடம் வண்டியின் சாவி உள்ளே மாட்டிக்கொண்டது எனக் கூறினாள். வந்தவர் சீதாவிடம் தான் உதவி செய்வேன் என்று கூறி ஒரு நிமிடத்தில் மகிழுந்தின் கதவை திறந்து கொடுத்தார். சீதா நன்றி கூறி நீங்கள் தான் கடவுள் என்று கூறினாள். அதற்கு அவர் இல்லை.... நான் நேற்று தான் சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு மகிழுந்து திருடன்... ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து நேற்று தான் வெளியே வந்தேன் என்று கூறினார்.

சீதா மகிழ்ச்சியுடன் நான் கடவுளிடம் உதவிக் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வல்லுநரை அனுப்பி வைத்துள்ளார் என்று கூறி நன்றியுடன் விடை பெற்றார். அவர் செய்த சிறிய உதவியின் அளவை உணர்ந்தார்

இன்றைய செய்திகள்

09.09.22

* முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர 2-வது சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையை பொதுப்பணித் துறை செயலர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் தடைபட்ட நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

* பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

* தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான வஹினி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

* நீட் தேர்வு முடிவுகள் 2022:  4 மாணவர்கள் முதலிடம்; தமிழக தேர்ச்சி விகிதம் 51.3% .

* 2020-ல் அதிக விபத்துகளுக்கு அதிவேகப் பயணமே காரணம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்.

* இந்தோனேசியாவில்  31,000 ஆண்டுகள் பழமையான உறுப்பு நீக்கம் செய்யப்பட்ட எலும்புக்கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

* பாகிஸ்தானில்   வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்பு:  உயிரிழப்பு எண்ணிக்கை 1,343 ஆக உயர்வு.

* தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் : தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.

* 2023 உலகக் கோப்பை ஹாக்கி : இங்கிலாந்து, ஸ்பெயின் ,வேல்ஸ் அணிகளுடன் 'டி' பிரிவில் இந்தியா.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

 * The High Court has ordered the Public Works Department Secretary to submit a study report regarding the construction of the 2nd tunnel to bring water from Mullai Periyar Dam to Tamil Nadu.

 * Nilgiri Hill Railway service resumed after rock fall on railway track.

 * The Department of Public Health has issued guidelines for treating seasonal influenza infections.

 * Due to continuous heavy rains, the water in Vahini river, a tributary of Thenpennai river, is overflowing after last 20 years.

 * NEET Results 2022: 4 Students Top;  Tamil Nadu pass rate is 51.3%.

 * Over speed of vechiles  is responsible for most accidents in 2020: Central government report informs

 * Researchers have discovered a 31,000-year-old dismembered skeleton in Indonesia.

 * People hit hard by unprecedented floods in Pakistan: death toll rises to 1,343

* South Asian Women's Football Championship: India beat Pakistan in the opening match.

* 2023 Hockey World Cup: India in Group 'D' with England, Spain and Wales.

* US Open Tennis: Ika Sviatek advances to semifinals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top