JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, படிப்பில் சேர இன்று முதல் அக் .12 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர். www.tnhealth.tn.gov.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். முதுகலையில் எம்டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுஷ் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு , நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு செப்டம்பர் 21 ந் தேதி முதல் அக்டோபர் 12 ந் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புகளில் சேர 12 ம் வகுப்பில் முதல்முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் 280 இடங்களும், சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 1164 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. மேலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.அதிலும் , பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி, இயற்கை மருத்துவம், யோகா ஆகிய படிப்புகளுக்கு 12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் இதற்கான விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.செப்டம்பர் 21 ந் தேதி முதல் www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment