Monday, September 12, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.2022

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: இரவு

குறள் : 1057

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

பொருள்:
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்

பழமொழி :

Every deed is to be judged by the doers intention.
இலட்சியமே செயலின் அளவுகோல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும். 

2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.

பொன்மொழி :

உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்! தன்னை அறிந்தவன் ஆணவமாயிருக்க மாட்டான் - சிம்மன்ஸ்

பொது அறிவு :

1.இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? 

ஞானபீட விருது

 2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? 

 ஐரோப்பா.

English words & meanings :

ju·jube - a thorny small golden color shrub. Noun. I love jujube fruit very much. இலந்தை பழம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

கொய்யா இலைகள் ஹைப்பர் கிளைசீமியாவைக் குறைக்க உதவுகின்றன. இது தவிர, கொய்யா இலைகளில் ஹைப்போலிபிடெமிக் பண்புகளும் உள்ளன, இது உடலில் உள்ள கொழுப்புகளின் அளவைக் குறைக்கும்.

NMMS Q 57:

Beautiful : Ugly :: Healthy :? a) strong b)weak c)fat d) sick 

 Answer : sick

செப்டம்பர் 12


ஜெசி" ஓவென்ஸ் அவர்களின் பிறந்தநாள்




ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 121913-மார்ச் 311980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

நீதிக்கதை

நரியும் கொக்கும்

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுதுப்போக்காக இருந்தது. அதே காட்டில் அறிவுமிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அனைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது. 

ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது. நரி அந்த கொக்கைப் பார்த்து நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா? என்று கேட்டது.

கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது. கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை. 

நரியோ நக்கி நக்கி அந்த சூப்பை குடித்துவிட்டு, நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது? என்று சிரித்துகொண்டே கேட்டது. கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது என்று கூறியது. கொக்கு நரியிடம், இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும் என்று கூறியது.

செல்லும்முன் இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறன். உன்னால் வர முடியுமா? என்று கேட்டது. நரியும் வர சம்மதம் தெரிவித்தது.

நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோஷமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது. அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல இறைச்சிகளை போட்டு சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது. 

அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவைமிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனையை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது. 

கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை. குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே நக்கி சாப்பிட முடிந்தது. கொக்கு நரியைப் பார்த்து சூப் எப்படி இருந்தது என்று கேட்டது? நரியும், மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை என்று பொய் சொல்லியது.

அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது. அப்போது தான் நரி நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று உணர்ந்தது. அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

இன்றைய செய்திகள்

12.09.22

🌸மதுரை தமுக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மதுரை மாநாட்டு மைதானத்தில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

🌸கூகுள் அதன் முகப்புப் பக்கத்தில் அதன் லோகோவை சாம்பல் நிறத்தில் மாற்றியுள்ளது.

🌸பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயனடைந்து வருவதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

🌸வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.இதனால் தமிழகத்தில் இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

🌸மேட்டுப்பாளையம்:பில்லுார் அணை நிரம்பியதை அடுத்து வினாடிக்கு, 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

🌸 T20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


Today's Headlines

🌸* The Book Fair will be held from September 23rd to October 3rd at the newly constructed Madurai Conference Grounds at the Tamukkam Grounds in Madurai.

 🌸Google has changed its logo on its home page to grey.

 Tamil Nadu7 Transport Minister Sivashankar has said that 35 lakh women are benefiting daily through free bus travel for women.

 🌸The low pressure area over the Bay of Bengal may strengthen into a depression in the next 24 hours. Due to this, heavy rain may occur in 5 districts of Tamil Nadu namely Nilgiris, Coimbatore, Tirupur, Theni and Dindigul today and tomorrow.

 🌸Mettupalayam: 7,000 cubic feet of water per second was released after the Pillar Dam was full, causing flooding in Bhavani River.

🌸 In the T20 Asian cup final Srilanka won by 23 runs against Pakistan and won the championship.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top