Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 29, 2022

'ரேஷன் கடைக்கு விரைவில் 4,400 ஊழியர்கள் நியமனம்'

''ரேஷன் கடைகளில் உள்ள 4,403 காலி பணியிடங்களுக்கு, வரும் டிசம்பருக்குள் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரியில் பணி ஆணை வழங்கப்படும்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், அமைச்சர் பெரியசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் பெரியசாமி அளித்த பேட்டி:கூட்டுறவு வங்கிகளில், கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டன. இந்தாண்டில் இதுவரை, 4,000 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.புதிதாக சேர்ந்த உறுப்பினர் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், 5 சவரன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 4,900 கோடி ரூபாய் அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்று, சில தினங்களில் வழங்கப்படும்.ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்காக 600 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 4,451 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் கணினி வாயிலாக ஒருங்கிணைக்கப்படும். 2,000 சங்கங்கள், பல்வேறு தொழில்கள் செய்யும் சங்கங் களாக மாற்றப்படும். 

ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில், 4,403 காலி பணியிடங்கள் உள்ளன. ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பு, வரும் 1ம் தேதி முதல் வெளியிடப்பட்டு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களுக்குள் தேர்வு பணிகள் முடிக்கப்படும்.ஜனவரியில் பணிஆணை வழங்கப் படும். ஊழியர் தேர்வு தொடர்பான வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment