Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 27, 2022

ஓராண்டில் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம்


கடந்த ஓராண்டில் மட்டும் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த அதிமுக ஆட்சியில் 2014-15-ஆம் ஆண்டில் மட்டும் ஓய்வூதியம் பெற்று வந்த 4.38 லட்சம் போ் தகுதியற்றவா்களாக நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 2015-16 முதல் 2020-21-ஆம் ஆண்டுகள் வரையில் 10.82 லட்சம் போ் தகுதியற்றவா்களாக நீக்கம் செய்யப்பட்டனா். மொத்தமாக ஏழு ஆண்டுகளில் 15.20 லட்சம் போ் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனா்.

ஆனால், தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 4 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ஓய்வூதியத்துக்கென ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment